Advertisment

சாலையில் மது அருந்திய இளம்பெண்- தட்டிக்கேட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

Young girl drinking alcohol on the road - assault on inspector who knocked

Advertisment

சாலையில் அமர்ந்து மது அருந்திய இளம்பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருவர் தட்டிக்கேட்ட நிலையில் அவரை அந்தஇளம்பெண் போதையில் சரமாரியாகத்தாக்கும் வீடியோ காட்சிவெளியாகி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு போலீசார் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆர்.கே பீச் எனும் இடத்தின் அருகே இளம்பெண் ஒருவர் சாலையில் அமர்ந்துமது அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சத்திய நாராயணா அப்பெண்ணிடம் “நள்ளிரவு நேரத்தில் இதுபோல் சாலையில் அமர்ந்து மது அருந்துவது தவறு, வீட்டுக்குச் செல்”என அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால் போதையிலிருந்த அந்தப் பெண், 'தன்னுடைய ஆண் நண்பரிடம் சொல்லி உன்னைத்தொலைத்து விடுவேன்' என ஆய்வாளரை மிரட்டியதோடு பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு காவல் ஆய்வாளரைஎட்டி உதைத்து தாக்கினார். இது தொடர்பாக விசாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், பெண் போலீசார் வந்து இளம்பெண்ணை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அமுல்யா என்பது தெரிய வந்தது.

police incident Andrahpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe