Skip to main content

தவறான எண்ணத்தோடு பின் தொடர்ந்தவனை சரமாரியாக அடித்து உதைத்த இளம்பெண்!!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018

 

ராஜஸ்தானில் தேவையில்லாமல் பின்தொடர்ந்து வந்த இளைஞரை கட்டையால் சரமாரியாக அடித்து இளம்பெண்  எச்சரித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

 

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற இடத்தில் தனியாக சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை தேவையில்லாமல் பின் தொடர்ந்து வந்த இளைஞரை இளம்பெண் கண்டித்துள்ளார். ஆனால் அந்த இளைஞன் தப்பான நோக்கத்தோடு பின்தொடர்ந்து வந்ததாகவும், தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகவும் அந்த இளம்பெண், ''உன்னை போன்றவர்களுக்கு இது ஒரு படமாக இருக்கட்டும்'' என சம்பவ இடத்திலேயே சரமாரியாக தாக்கினார். அவர் அந்த இளைஞரை தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Sexual harassment of a child girl in uttar pradesh

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.