yogi thali

Advertisment

உத்திரப்பிரதேச மாநிலம், அல்லஹாபாத் மேயர் நேற்று யோகி தாளி என்னும் ரூபாய் பத்திற்கு மத்திய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இது உபியில் இருக்கும் யோகி அரசாங்கத்தின் திட்டம் அல்ல, தனிநபர் ஒருவரின் உந்துதலில் ஆரம்பிக்கப்பட்டது. உணவின்றி தவிப்பவர்களுக்கு, ஏழ்மையானவர்களுக்கு, சாமியார்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என்று திட்டத்தை தொடங்கிவைத்த மேயர் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்கு 'யோகி தாளி' என்று பெயர்வைத்துள்ளனர். தாளி என்றால் மதிய உணவு. உபியின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மக்களுக்காக சேவை செய்துகொண்டே வருகிறார். அதனால்தான் இந்த ரூ.10 மதிய உணவு திட்டத்திற்கு யோகி தாளி என்று பெயரிடப்பட்டுள்ளதாக திட்டத்தை செயல்படுத்தும் திலீப் அலியாஸ் காகி கூறுகிறார்.