முசாஃப்பர்நகர் கலவரத்தில் தொடர்புடைய வழக்குகளை திரும்பப்பெற யோகி அரசு திரும்பப்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2013ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாஃப்பர்நகர் மற்றும் ஷாம்லி ஆகிய பகுதிகளில் மாபெரும் கலவரம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தில் தொடர்புடைய 1,455 பேர் அப்போது காவல்நிலையங்களில் அடைக்கப்பட்டிருந்தனர். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதெல்லாம் நடந்தது சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி சமயத்தில்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/YOYO.jpg)
தற்போது ஆட்சியில் இருக்கும் யோகி அரசு இந்த வழக்கில் 131 வழக்குகளை திரும்பப்பெறும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவற்றில் 13 கொலை மற்றும் 11 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் இனவாதத் தாக்குதல் நடத்திய வழக்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், உபி மாநில அமைச்சர் சுரேஷ் ரானா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், பர்தேண்டு சிங் எம்.பி, உமேஷ் மாலிக் எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ.க. சாத்வி ப்ராசி ஆகியோரின் வழக்குகளும் அதில் அடக்கம். இந்துக்களை வழக்கில் இருந்து வெளியே கொண்டுவருவதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என சொல்லப்படுகிறது.
இது தொடர்பான முன்மொழிவை அம்மாநில சட்டத்துறை தயார் செய்து முசாஃப்பர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. 13 முக்கியப்புள்ளிகளை மையமாக வைத்து இந்த வழக்குகள் திரும்பப்பெறப்பட உள்ளன. பொதுநலன் கருதி என்பது அதில் முக்கியப்புள்ளி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)