உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜூன் 30 வரை பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, மக்கள் கூட்டமாகக் கூடவோ அனுமதி கிடையாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Advertisment

yogi bans public gatherings till june 30

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 24,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 780க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,500 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

 nakkheeran app

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜூன் 30 வரை பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, மக்கள் கூட்டமாகக் கூடவோ அனுமதி கிடையாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், இந்தமாதிரியான நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜூன் 30 -ஆம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. நிலைமையைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விதமான பொது நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்படும். யாரும் இதுதொடர்பாக எந்த ஏற்பாடுகளையும் செய்யக்கூடாது" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.