Advertisment

யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் பக்கம் ஹேக்... முகப்பு படத்தில் அட்டூழியம்!

Yogi Adityanath

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் அவரது புகைப்படத்தை மாற்றி குரங்கின் புகைப்படத்தை மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

5 மாநில தேர்தலுக்குப் பிறகு அதிகப்படியான இடங்களில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்து யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக டிவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும் அந்த டிவிட்டர் பக்கத்தில் முகப்புப்படமாக வைக்கப்பட்டிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் படத்தை எடுத்துவிட்டு கார்ட்டூன் குரங்கு படத்தை முகப்புப்படமாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிவிட்டர் பக்கத்தை மீட்கவும், ஹேக் செய்தவர்களை கண்டுபிடிக்கவும் முயற்சி எடுத்துள்ளதுஉத்திரபிரதேச அரசு.

Advertisment

uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe