Skip to main content

யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் பக்கம் ஹேக்... முகப்பு படத்தில் அட்டூழியம்!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Yogi Adityanath

 

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் அவரது புகைப்படத்தை மாற்றி குரங்கின் புகைப்படத்தை மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

5 மாநில தேர்தலுக்குப் பிறகு அதிகப்படியான இடங்களில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்து யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக டிவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும் அந்த டிவிட்டர் பக்கத்தில் முகப்புப்படமாக வைக்கப்பட்டிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் படத்தை எடுத்துவிட்டு கார்ட்டூன் குரங்கு படத்தை முகப்புப்படமாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிவிட்டர் பக்கத்தை மீட்கவும், ஹேக் செய்தவர்களை கண்டுபிடிக்கவும் முயற்சி எடுத்துள்ளது  உத்திரபிரதேச அரசு.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் வினாத்தாள் கசிவு; 300 கோடி டார்கெட்; புட்டு புட்டு வைத்த பிஜேந்தர் குப்தா

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
NEET Question Paper Leak; 300 crore target; Bijendir Gupta who made Pudu Pudu

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் உதவியுடன் வினாத்தாள்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. 700 மாணவர்களுக்கு நீட் வினாத்தாள் விற்க திட்டமிட்டதாக மோசடி கும்பலைச் சேர்ந்த பிஜேந்தர்  குப்தா என்பவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே நீட் வினாத்தாள் கசியும் எனப் பிஜேந்தர் குப்தா மார்ச் மாதமே வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலானது. போக்குவரத்தின் போது நீட் வினாத்தாள் பெட்டிகள் எப்படி உடைக்கப்படுகின்றன எப்படி கைமாறுகிறது என்பது பற்றியும் வீடியோவும் வெளியாகியிருந்தது. நீட் வினாத்தாள் கசிவில் அரசு அதிகாரிகள் முதல் அச்சகம் வரை தொடர்பு இருக்கும் எனப் பிஜேந்தர் குப்தா தெரிவித்திருந்தார். உத்திரபிரதேசத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள பேடி ராம் என்பவரின் உதவியாளராக இருந்த  பிஜேந்தர் குப்தா அவருடைய உதவியுடன் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் அடங்கிய பெட்டிகளை சாதுரியமாக உடைத்து அவற்றைத் திருடி விற்று வந்தது தெரியவந்துள்ளது.

Next Story

காதலியின் கழுத்தை வெட்டி கையில் பிடித்தபடி வீடியோ; பதைபதைக்க வைக்கும் சைக்கோ கொலை

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Video of girlfriend's throat being cut and held in hand; A young man's disturbing psycho act

உத்தரப்பிரதேசத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்து வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியின் தலையை வெட்டி சிரித்த முகத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட சைக்கோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலசந்தர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தன். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் அந்தன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதலி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தன் திடீரென ஆத்திரத்தில் காதலியின் தலையைத் துண்டாக வெட்டியுள்ளார்.

வெட்டிய தலையுடன் சிரித்துக் கொண்டே வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நடிகர் சஞ்சய் தத் நடித்த கல்நாயக் என்ற படத்தைப் பார்த்து அதில் வரும் 'பல்லு' என்கிற கேரக்டர் போலவே தானும் கொலை செய்தேன்' எனத் தெரிவித்துள்ளது பதைபதைப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் 'இனி யார் என்னை ஏமாற்றினாலும் இப்படித்தான் கொலை செய்வேன்' எனவும் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது,

ஒரு சினிமா நடிகரைப் பார்த்து இளைஞர் கொடூரச் செயலில் ஈடுபட்டு நேரடியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உத்தரப்பிரதேச போலீசார் இளைஞர் அந்தனை கைது செய்துள்ளனர்.

The website encountered an unexpected error. Please try again later.