Advertisment

யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?  

yodi adityanath

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 7ஆம்தேதி வரை, ஏழு கட்டங்களாகநடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று கோரக்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின்படி அவருக்கு1 கோடியே 54 லட்சத்து 94 ஆயிரத்து 054 ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் கையிலிருக்கும் பணம், ஆறு வங்கி கணக்குகளில் உள்ள பணம் மற்றும் சேமிப்பு ஆகியவை அடங்கும்.

49,000 மதிப்புள்ள 20 கிராம் எடையிலான தங்க காதணியும், 20,000 மதிப்புள்ள 10 கிராம் எடையிலானருத்ராட்சத்தோடு கூடிய தங்க செயினும், 12,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போனும் வைத்திருப்பதாக தனதுபிரமாண பாத்திரத்தில்குறிப்பிட்டுள்ள யோகி ஆதித்யநாத், 1 லட்சம் மதிப்புள்ள ரிவால்வரும், 80 ஆயிரம் மதிப்புள்ள ரைபிளும்தன்னிடம்இருப்பதாக கூறியுள்ளார்.

uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe