Skip to main content

"இனி இறைச்சி விற்கக்கூடாது, பால் விற்பனை செய்யுங்கள்"- கிருஷ்ணர் பிறந்த நகரில் யோகி ஆதித்யநாத் பேச்சு

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

yogi adityanath

 

கரோனா பரவலுக்கு மத்தியிலும், நேற்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா பக்தர்களால் கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கூறப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற கிருஷ்ணோத்ஸவா விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

 

அப்போது அவர், மதுரா நகரில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், மதுராவில் மது மற்றும் இறைச்சி விற்பனையைத் தடை செய்வதற்கான திட்டங்களை வகுக்குமாறும், அவற்றை விற்பனை செய்பவர்களை வேறு வர்த்தகத்தில் ஈடுபடுத்தத் திட்டங்களை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

 

மேலும் அவர், மது மற்றும் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மதுராவின் பெருமையை மீண்டும் உயிர்ப்பிக்க பால் விற்பனையை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து; உ.பி. அரசு அதிரடி அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
UP Govt Action Announcement for Constable exam written by 50 lakhs cancelled

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். 

இந்த நிலையில், காவல்துறை பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் கசிந்து பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் இந்த தேர்வு ரத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வு 2023-ஐ ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத் தன்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் தப்ப முடியாது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

பறிபோன சிறுவனின் உயிர்; உறியடி நிகழ்வில் ஏற்பட்ட சோகம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

 electrocution; Tragedy in the Uriati incident

 

ராமநாதபுரம் பரமக்குடி அருகே உறியடி விளையாட்டின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள மேலாயக்குடியில் நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி விழா நடைபெற்றது. மேலயாக்குடியைச் சேர்ந்த முருகன் என்பவர் தன்னுடைய இரண்டு மகன்களுடன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது முருகனின் மகன்கள் கோகுல ராகுல், கபினேஷ் உறியடி கயிற்றை இழுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக உறியடி பானை கட்டப்பட்டிருந்த கம்பி அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதி மின்சாரம் தாக்கி கோகுல ராகுல் மற்றும் கபினேஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

 

இருவரும் உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் முருகனின் ஏழு வயது மகன் கபினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோகுல ராகுல் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்  குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறியடி விழாவின் பொழுது எதேச்சையாக யாரோ ஒருவர் எடுத்த வீடியோ கட்சியில் அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.