yogi adityanath

கரோனா பரவலுக்கு மத்தியிலும், நேற்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா பக்தர்களால் கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கூறப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற கிருஷ்ணோத்ஸவா விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

Advertisment

அப்போது அவர், மதுரா நகரில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், மதுராவில் மது மற்றும் இறைச்சி விற்பனையைத் தடை செய்வதற்கான திட்டங்களை வகுக்குமாறும், அவற்றை விற்பனை செய்பவர்களை வேறு வர்த்தகத்தில் ஈடுபடுத்தத் திட்டங்களை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Advertisment

மேலும் அவர், மது மற்றும் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மதுராவின் பெருமையை மீண்டும் உயிர்ப்பிக்க பால் விற்பனையை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.