YOKI

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தலைவர்களின் வாழ்கை திரைப்படமாவது ஒரு புது ட்ரெண்டாகவே மாறிவிட்டது. அந்த வரிசையில் நடிகை சாவித்திரி, பாலிவுட் நடிகர் சஞ்சய்த் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படமாக வெளியானது. அதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போதைய பிரதமர் மோடி என அவர்களின் வாழ்க்கை வரலாறு படங்களும் தயாராகி கொண்டிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு ''ஜிலா கோரக்கப்பூர்''என்ற பெயரில்படமாகவிருக்கின்ற நிலையில் அந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தபோஸ்டரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற காவி உடை அணிந்த உருவம் நிற்கிறது அவரது கையில் துப்பாக்கி பின்புறமாக மறைத்து வைத்திருப்பது போன்றும் அருகில் ஒரு பசுமாடு, மேலும் அந்த போஸ்டரில் கோரக்நாத் கோவிலின் ஒரு பகுதியும் இடம்பெற்றள்ளது.

இந்த போஸ்டரால் பெரிய சர்ச்சை கிளம்ப அந்த திரைப்பட இயக்குநர் வினோத் திவாரி மற்றும்படக்குழுவினர்மீதுபுகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், இந்த படம் முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழுக்கும் மோடியின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற படங்களை எடுக்க யார் பணம் போட்டு தயாரிக்கமுன்வருகிறார்கள் என அறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisment