yogi about modi 2.0

இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சியமைத்து ஓராண்டுநிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஓராண்டு ஆட்சியைபாராட்டியுள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

Advertisment

இதுகுறித்த அவரது வாழ்த்து செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிமிகுந்த தலைமையின் கீழ், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளோம். இதில் சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா சாத என்ற அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையுடன் முழுக்க,முழுக்க வரலாற்றுசிறப்பு மிக்க சீர்திருத்தங்கள் மற்றும் சாதனைகள் பிரதமர் மோடியின் முதல் .ஐந்தாண்டு ஆட்சி இந்தியாவைபொருளாதார சூப்பர் பவராக்குவதற்கான அடித்தளம் என்றால், இரண்டாவது ஆட்சியின் இந்த முதல் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தங்கள், சாதனைகள் அடங்கியதன் தொடக்கமாக உள்ளது.

Advertisment

அதாவது ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத் என்ற ஒரே இந்தியா, ஆரோக்கிய இந்தியா என்ற நோக்கத்தை உள்ளடக்கிய பெண்களை மதிக்கும் முத்தலாக் ஒழிப்பு, பயங்கரவாதத்தை ஒழிக்கக் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ம் பிரிவு நீக்கம், ராமஜென்மபூமி, குடியுரிமைச் சட்டம், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை இந்த ஓராண்டு ஆட்சியின் சாதனைகள். கரோனா வைரஸ் நோயைகட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி சரியான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்" எனத் தெரிவித்தார்.