"அனுமன் ஒரு தலித்" வாயை விட்டு சிக்கிக்கொண்ட யோகி ஆதித்யநாத்

yog

'கடவுள் அனுமன் ஒரு தலித், அவர் காட்டில் வாழ்ந்த மனிதர்' என ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் செவ்வாய்கிழமை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் இவ்வாறு பேசியுள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜஸ்தான் சர்வ பிராமண மகாசபை நீதிமன்றம் வாயிலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நோட்டீஸை பெற்ற 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

election campaign hanuman Rajasthan yogi adithyanath
இதையும் படியுங்கள்
Subscribe