Skip to main content

யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் EMI கட்டுவதற்கு புதிய ஏற்பாடு...

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புத் தொகையை எடுப்பதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் கட்டாயம் செலுத்த வேண்டிய கடன் நிலுவைகளை நெப்ட் மற்றும் ஐஎம்பிஎஸ் மூலம் செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

yes bank announces new way to pay emi

 

 

பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' (YES BANK) வாராக் கடன் அதிகரிப்பால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புத் தொகையை எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈ.எம்.ஐ மற்றும் கிரெடிட் கார்ட் நிலுவைத் தொகைகளை இதர வங்கிக் கணக்குகளிலிருந்து நெப்ட் மூலம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யெஸ் வங்கியிலிருந்து ரூ.1300 கோடியை முன்னரே எடுத்தது எப்படி ..? திருப்பதி தேவஸ்தான தலைவர் பதில்...

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' (YES BANK) வாராக் கடன் அதிகரிப்பால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வந்த நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் அடுத்த முப்பது நாட்களுக்கு அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

tirupathi devasthanam about yes bank collapse

 

 

இந்நிலையில் கடந்த மாதம் திருப்பதி தேவஸ்தானம், யெஸ் வங்கியில் வைத்திருந்த ரூ.1300 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகை மற்றும் நகை ஆகியவற்றை எடுத்தது. வங்கி சேவைகள் முடங்கும் முன்பு திருப்பதி தேவஸ்தானம் சரியாக எப்படிப் பணத்தை எடுத்தது என்பது குறித்து, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறும்போது, "வங்கியின் நிதிநிலை மோசமாக இருந்ததை நான் ஏற்கெனவே உணர்ந்திருந்தேன். வங்கியின் நிதி நிலையை எனக்கு முன்கூட்டியே புரியவைத்து பணத்தைப் பாதுகாக்க உதவிய இறைவனுக்குத்தான் அனைத்து நன்றியும் போய்ச் சேரும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ராணா கபூர் ரூபாய் 2,000 கோடி முதலீடு செய்தது கண்டுபிடிப்பு!

Published on 08/03/2020 | Edited on 08/03/2020

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் ரூபாய் 2,000 கோடி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' (YES BANK) வாராக் கடன் அதிகாரிப்பால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

YES BANK RANA KAPOOR INVEST RS 2,000 CRORES

இந்த நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை இன்று அதிகாலை (08/03/2020) மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து மும்பை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு அமலாக்கத்துறையினர் ராணா கபூரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதையடுத்து யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை நான்கு நாள் (மார்ச் 11- ஆம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. 
 

அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் ரூபாய் 2,000 கோடி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 44 விலை உயர்ந்த ஓவியங்களை வாங்கியது, 12 போலி நிறுவனங்களில் முதலீடு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.