71 வயதான கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக பெங்களூரு பசவேஸ்வரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

yedyurappa meets hospitalized siddaramaiah

Advertisment

Advertisment

அங்கு அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பினார். இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து நெஞ்சு வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லை என கூறிய மருத்துவர்கள், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மேற்கொண்டனர்.

தற்போது அவரது உடல்நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் சித்தராமையாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.