Advertisment

‘இந்த கூட்டணி அரசு கூடிய சீக்கிரம் கலையும்’- எடியூரப்பா பரபரப்பு

yedyurappa

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி, பாஜகவை சேர்ந்த எடியூரப்பா மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நாகனா கௌடாவின் மகன் ஷாரனாவிடம் மொபைலில் பேசிய ஆடியோவை குமாரசாமி வெளியிட்டார். அந்த பேச்சுவார்த்தையில் எடியூரப்பா அவரிடம் 25 லட்சம் பணமும், அவரது தந்தைக்கு மினிஸ்டர் பதவி தருவதாகவும் கூறியுள்ளார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

Advertisment

இந்நிலையில் எடியூரப்பா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழும். அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. அதனால் நமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சியினரின் ஆசைகளுக்கு அடிபணிய வேண்டாம். உங்களுடன் கட்சி உள்ளது. உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். இந்த கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கவிழ்ந்துவிடும் என்று தோன்றுகிறது. இந்த கூட்டணி அரசில் நடந்து வரும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு சாதகமாக இருக்கிறது. சட்டசபை கூட்டத்தில் நமது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இது நமது கட்சி மேலிட தலைவர்களின் உத்தரவு ஆகும். கவர்னர் உரையின்போதே இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது. குமாரசாமி மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அவர்களே சண்டை போட்டுக்கொண்டு ஆட்சியை இழப்பார்கள். நாம் பொறுமையாக அதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisment

karnataka yedyurappa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe