Skip to main content

“குமாரசாமியின் அரசு வீழ்த்தப்படும்” - எடியூரப்பா காட்டம்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
 

yedyurappa

 

 

இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த் நீதிபதி, சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. 
 

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு தன்னுடைய பலத்தை காட்ட இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக கூறி இருந்தது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதற்காக  எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி என்று பல எம்.எல்.ஏ க்கள் வருகை தந்துள்ளனர். அதிருப்தியில் இருக்கும் காங். எம்.எல்.ஏ க்கள் இன்று நடைபெறும் நம்பிக்கை தீர்மானத்தில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இந்நிலையில் சட்டசபை வந்தடைந்த எடியூரப்பா செய்தியாளர்களிடம், “நாங்கள் 101% நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். எங்களிடம் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர். எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை அவர்களுடைய அரசு வீழ்த்தப்படும்” என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

எடியூரப்பாவின் பேத்தி சடலமாக மீட்பு!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Yediyurappa's granddaughter

 

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யாவின் உடல், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டதாக  கூறப்படுகிறது.

 

மருத்துவரான சௌந்தர்யாவுக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீரஜ் என்ற மருத்துவரோடு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சௌந்தர்யாவின் உடல் பிரதேச பரிசோதனை செய்யப்படும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

 

 

Next Story

தந்தையைத் தொடர்ந்து மகளுக்கும் கரோனா பாதிப்பு!! இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதி...

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

yedyurappa daughter tested positive for corona

 

 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கரோனா உறுதி செய்யப்பட்ட எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், எடியூரப்பாவைத் தொடர்ந்து அவரது மகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை, அவருக்கும் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, எடியூரப்பா சிகிச்சை பெறும் அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.