Advertisment

முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்குக் கரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக்கொண்ட முதல்வர் எடியூரப்பா...

Yediyurappa says he will work from home after some staffs tested poitive

கர்நாடக முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்குக் கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கிவரும் சூழலில், பல்வேறு மாநிங்களிலும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது அலுவலக ஊழியர்கள் சிலருக்குக் கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்களுக்குத் தொற்று ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நான் வீட்டிலிருந்து எனது கடமைகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது உடல் ஆரோக்கியமாக இருப்பதைக் குறிப்பிட்ட எடியூரப்பா மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

corona virus yedyurappa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe