Yeddyurappa retired from electoral politics

Advertisment

இனி தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை. ஆனால், என்னுடைய வாழ்க்கையில் கடைசி மூச்சு உள்ள வரை பாஜகவை பலப்படுத்த நேர்மையாக உழைப்பேன் என பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து தான் விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று அவருக்கு சட்டசபையில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் தனது நிறைவு உரையாற்றிய எடியூரப்பா, “இனி தேர்தல் அரசியலில் போட்டியிடப் போவதில்லை. ஆனால், என்னுடைய வாழ்க்கையில் கடைசி மூச்சு உள்ள வரை பாஜகவை பலப்படுத்த நேர்மையாக உழைப்பேன். நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம். நான் அங்கு பயிற்சி பெற்றதால் தான் எனக்கு பல பதவிகள் கிடைத்தன. எனக்கு பா.ஜனதா அநீதி இழைத்ததாகவும், புறக்கணித்து விட்டதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. பாஜகவும், பிரதமர் மோடியும் என்னை ஒருபோதும் புறக்கணித்ததே இல்லை. பிரதமர் மோடி எனக்கு உரிய பதவி மற்றும் அங்கீகாரத்தை கொடுத்தார். கர்நாடகத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப் பாடுபடுவேன்” எனத் தெரிவித்தார்.