Advertisment

ஆடியோ லீக் விவகாரம்...செல்போனுக்கு தடை விதித்த எடியூரப்பா!

கர்நாடக மாநிலத்தில் வரும் டிசம்பர் 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் 11-ந்தேதி தொடங்கும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக சார்பில் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கு மாநில பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். காங்கிரஸ், மஜக முன்னாள் உறுப்பினர்களுக்கு நாம் ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்கள். இதற்கிடையே 15 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, இடைத்தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடியூரப்பா, உப்பள்ளியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ரகசியமாக பேசிய கருத்துகள் அடங்கிய ஆடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

Advertisment

vv

அந்த ஆடியோவில், காங்கிரஸ் மஜக கூட்டணி கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.க்கள் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மேற்பார்வையில் மும்பையில் தங்க வைக்கப்பட்டனர் என்றும், இதில் தனது பங்கு இல்லை என்று அவர் கூறுவதை போன்றும் ஆடியோ வெளியானது. மேலும், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால்தான் பாஜக ஆட்சி அமைந்தது என்று அந்த ஆடியோவில் அவர் தெரிவித்திருந்தார். அதனால் அவர்களுக்கு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ ஆதாரத்தை, தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் அறிவித்து இருந்தார். இந்த விவகாரம் முதல்வர் எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னை சந்திக்க வரும் எந்த நிர்வாகியும் செல்போன் உபயோகிக்க தடை வித்துள்ளார் எடியூரப்பா.

Advertisment

CM YEDIYURAPPA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe