சுதந்திர இந்தியா வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அரசியல் அதிசயங்கள் கர்நாடகத்தில் மட்டும் எளிதாக நடக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான தேர்தல்களில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. இது கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகத்தில் நடக்கும் அரசியல் விநோதம். குறிப்பிட்டுசொல்ல வேண்டுமானால் இந்த 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மூன்று பேர் மட்டுமே கர்நாடகத்தின் முதல்வராக தங்களுடைய முழு பதவி காலத்தையும் நிறைவு செய்துள்ளார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/050 adi_0.jpg)
பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே நேற்று கர்நாடகத்தின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் எடியூரப்பா. தற்போது முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா, இதற்கு முன்பு மூன்று முறை முதல்வராக இருந்திருந்தாலும் தன்னுடைய முழு பதவிக்காலத்தை ஒருமுறை கூட நிறைவு செய்யவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் 4-வது முறையாக அவர்முதல்வராகபதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், புக்கனகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா என்ற தனது முழுப் பெயரை 2007-ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற போது B.S yeddyurappa என ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டார். ஆனால் அப்போது அவர் வெறும் 7 நாட்களே பதவி வகித்தார். அதன் பின்னர் பதவியேற்றக் காலங்களிலும் அவர் முழுமையாக பதவி வகிக்கமுடியவில்லை. இதனால், இந்த முறை நியூமராலஜியின் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் B.S yediyurappa என மாற்றிக்கொண்டுள்ளார். இந்த முறையாவது அவரின் எண்ணம் ஈடேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow Us