Advertisment

''யாரு இவன் யாரு இவன்...'' முதலையை அசால்ட்டாக தோளில் தூக்கிய இளைஞர்- வைரலாகும் வீடியோ

''Yaru Ivan Yaru Ivan...'' The young man carried the crocodile on his shoulders as an assault- viral video

Advertisment

இளைஞர் ஒருவர் அசால்டாக முதலையை தோளில் போட்டு தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் வாய்க்கால் பகுதியில் முதலை ஒன்று உலாவிக் கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்த முதலையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என ஊர் மக்கள் அச்சம் தெரிவித்தனர். உடனடியாக அங்கிருந்தஇளைஞர்கள் முதலையை பிடிக்க முயன்றுள்ளனர். அந்த பகுதி இளைஞர்களே ஒன்று சேர்ந்து முதலையைப் பிடித்து அதன் கை மற்றும் வாய் பகுதிகளை கயிறு கொண்டு இறுக்கமாக கட்டினர்.

பின்னர் அசால்டாக இளைஞர் ஒருவர் முதலையை தோள் மீது தூக்கிக்கொண்டு வயல்வெளிகளுக்கிடையே நடந்து சென்றார். அந்த முதலையை பாதுகாப்பாக ஆற்றுப்பகுதியில் விட முடிவெடுத்து இளைஞர்கள் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இளைஞர் ஒருவர் முதலையை தோள்மேல் தூக்கி செல்லும் இந்த வீடியோ காட்சிகளை பாகுபலி படத்தின் பிஜிஎம்களை போட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

crocodile uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe