yanam independent candidate admitted hospital

Advertisment

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை (06/04/2021) நடைபெறுகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மாநில காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய இரு தொகுதிகளில் ரங்கசாமி போட்டியிடுகிறார். இதில், ஏனாம் தொகுதியில் துர்கா பிரசாத் பொம்மடி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், சில நாட்களாக துர்கா பிரசாத்தைக் காணவில்லை என்று அவரது மனைவி நேற்று (05/04/2021) ஏனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் பிரச்சாரத்துக்குச் சென்ற கணவரைக் கடந்த 1-ஆம் தேதி முதல் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கோதாவரி ஆற்றுப்பகுதியில் மாயமான சுயேச்சை வேட்பாளரை மீட்டனர். அதைத் தொடர்ந்து, துர்கா பிரசாத் பொம்மடியை ஏனாம் மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர், அவரை யாராவது கடத்திச் சென்று தாக்கினார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.