Skip to main content

“உன் வீட்டுப்பெண்களை இப்படி வீடியோ எடுப்பியா..” - தவறாகப் படமெடுத்ததாக இளைஞர்களைத் தாக்கிய செவிலியர்கள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

"Would you take the women of your house like this?" The nurse slapped the youths who took pictures wrongly in the hospital

 

மருத்துவமனையில் செவிலியர்களை வீடியோ எடுத்ததாகக் கூறி, இளைஞர்களை தடிமனான கம்பினால் செவிலியர்கள் தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

பீகார் மாநிலம், சாரான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு, மருத்துவச் சான்றிதழ் வாங்குவதற்காக இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். வந்த நபர்கள் மருத்துவமனையை தங்களது செல்போனில் வீடியோ பதிவாக எடுத்துள்ளனர். இதனைக் கண்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களைப் பிடித்து தனியறையில் அடைத்து வைத்து விசாரித்துள்ளனர்.

 

செவிலியர் ஒருவர் கையில் மூங்கில் போன்ற தடிமனான கம்பினை எடுத்துக்கொண்டு இருவரையும் மாறி மாறி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ காட்சிகளாக எடுத்துள்ளனர். மேலும், இளைஞர்களைத் தாக்கும் பெண் உன் வீட்டுப் பெண்களை இப்படி வீடியோவாக எடுப்பியா எனக் கூறிக்கொண்டே தாக்குகிறார்.

 

அந்த வீடியோ காட்சியில், மருத்துவமனையில் இருக்கும் குறைகளைத்தான் வீடியோவாக எடுத்தோம் என ஒரு இளைஞர் கூறுகிறார். இருந்தும், அவர் கூறுவதைக் கேட்காத செவிலியர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 

இவ்விவகாரம் இருவேறு விதமான விவாதத்தை எழுப்பியுள்ளது. இணையத்தில் பீகாரின் மருத்துவத்துறையைக் குறிப்பிட்டு, இளைஞர்களைத் தாக்கிய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். அதே சமயம், மற்றொரு தரப்பினர் வீடியோ எடுத்த இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டி, செவிலியர்கள் செய்தது சரிதான் எனக் கூறி வருகின்றனர்.

 

இச்சம்பவம் பீஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை சோதனை செய்வதற்காகவே வீடியோ வெளியிட்டேன்” - விமர்சனங்களுக்கு தேஜஸ்வி பதிலடி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Tejaswi's response to criticism

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நாடு முழுவதும் இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்தும், இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார். இதனால், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வந்த தேஜஸ்வி யாதவின் பதவி பறிக்கப்பட்டது. இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், சிபிஐ எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று (09-04-24) தேஜஸ்வி யாதவ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போது மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், “கூட்டணி கட்சி தலைவரான முகேஷ்  இன்று மீன் கொண்டு வந்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருப்பதால் வெறும் 10 - 15 நிமிடங்கள் தான் இடைவேளை இருக்கும். அதற்குள் சாப்பிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நவராத்திரி நேரத்தில், தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவதாக பா.ஜ.க அவரை கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்நிலையில், அந்த வீடியோ குறித்து பீகார் துணை முதல்வர் விஜய் சின்ஹா கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், “ஒரு சிலர் தங்களை சனாதனத்தின் மகனாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், சனாதனத்தின் மதிப்புகளை காப்பாற்றுவதில்லை. நவராத்திரி நேரத்தில் யாராவது மீன் சாப்பிடும் வீடியோவை பதிவிடுவார்களா? இதன் மூலம் ஏமாற்று அரசியலில் ஈடுபடுகிறீர்கள்” என்று கூறினார்.

பா.ஜ.கவின் விமர்சனங்களுக்கு தேஜஸ்வி யாதவ் இன்று (10-04-24) தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பா.ஜ.கவில் உள்ளவர்கள் அறிவுத்திறனை சோதனை செய்வதற்காகவே இந்த வீடியோவை நாங்கள் பதிவு செய்தேன். அந்த வீடியோவை நான் நேற்று பகிர்ந்திருந்தாலும், அது நவராத்திரிக்கு முந்தைய நாளான கடந்த 8ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பதை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதை கவனிக்காமல் எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. நாங்கள் நினைத்ததை சரி என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Next Story

லாலு பிரசாத்தை கைது செய்ய உத்தரவு; ம.பி. நீதிமன்றம் அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 MP Court action on Order to arrest Lalu Prasad

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க மற்றும் லோக் ஜனசக்தி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 1995 ஆண்டு 1997ஆம் ஆண்டு வரை பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். 

லாலு பிரசாத் யாதவின் ஆட்சி காலத்தில், போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும், இது தொடர்பான வழக்கு குவாலியர் பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், இந்த வழக்கு விசாரணைக்கு லாலு பிரசாத் யாதவ் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கு எதிராக நிரந்தர கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.