/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IKEA caterpillar collage.jpg)
ஹைத்ராபாத்தில் பிரபல ரெஸ்டாரெண்டான IKEA-ல்அளிக்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததை அடுத்து அந்த உணவகத்திற்கு 11,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹத்ராபாத்தில் மிகவும் பிரபல ரெஸ்டாரெண்டான IKEA-வில் கடந்த சனிக்கிழமை சாப்பிட சென்ற ஒருவருக்கு கொடுக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் புழு இருப்பதை கண்டு அதிர்ந்து அதை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் உணவு பாதுகாப்பு மற்றும் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்ரேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் உணவு பாதுக்காப்பு துறைஉறுப்பினர்கள் அந்த உணவகத்தில்சோதனையிட்டு உணவு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர் மேலும் அந்த உணவகத்திற்கு 11,500 ரூபாய் அபராதம் கட்டவும் உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IKEA GHMC.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
மிகப்பெரிய வர்த்தக அமைப்புகொண்ட நிறுவனமான IKEA-ல் இப்படி உணவில் புழு இருப்பது உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றியுள்ளதாக கருத்துக்கள் குவிந்துவருகிறது. அதேபோல் ரோட்டில் உள்ள சந்து பொந்துகளில் உள்ள கடைகளில் அதிரடி ரெய்ட்டுகள் போகும்உணவு பாதுகாப்பு துறை இதுபோன்ற இடங்களை விட்டுவிடுகின்றன என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதேபோல் அண்மையில் ஹைத்ராபாத்திலுள்ள பிவிஆர் போரம்சுஜானா மாளில் பாக்கெட்டில் அடைத்துவைக்கப்பட்ட உணவில் கரப்பாம்பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3000 ரூபாய் அபராதம் பெற்றது குறிப்படத்தக்கது.
Follow Us