உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய மஞ்சுநாத், தசரா திருவிழாவைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம், 5 யானைகள் கொண்டு மைசூர்அரண்மனை வளாகத்தில் நடைபெறும் என்றும், சாமுண்டி அம்மன் மலைக்கு வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.