Skip to main content

தனியுரிமை கொள்கை விவகாரம்... செயலியின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுமா? - வாட்ஸ்அப் விளக்கம்! 

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

whatsapp

 

வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு இந்த மாற்றங்கள் கடந்த மே 15ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதனையடுத்து வாட்ஸ்அப், அதன் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்துள்ள மாற்றத்தைத் திரும்பப் பெறவோ அல்லது அந்த மாற்றங்களைப் பயனர்கள் ஏற்காமல் இருப்பதற்கு வாய்ப்பளிக்கவோ அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட மத்திய அரசை அறிவுறுத்தும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கில் இன்று (03.06.2021) மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், "புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கைகளுக்குப் பயனர்களிடமிருந்து தந்திரமாக ஒப்புதல் பெறுவதன் மூலம் வாட்ஸ்அப், பயனர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது" என மத்திய அரசு குற்றஞ்சாட்டியதோடு, "வாட்ஸ்அப், அதன் டிஜிட்டல் வலிமையை தற்போதுள்ள பயனர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (பி.டி.பி) மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, வாட்ஸ்அப் தற்போதுள்ள பயனர்களைப் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும்" எனவும் தெரிவித்தது.

 

இந்தநிலையில், மத்திய அரசின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், "நாங்கள் மத்திய அரசுக்கு ஏற்கனவே தனியுரிமை கொள்கை குறித்து பதிலளித்துள்ளோம். பயனர்களின் தனியுரிமையே எங்கள் முன்னுரிமையாக இருக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்துள்ளோம். சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கைகள், மக்களின் தனிப்பட்ட செய்திகள் தொடர்பாக தனியுரிமையை மாற்றாது. மாறாக வணிக அமைப்புகளுடன் எவ்வாறு தொடர்புகொள்ளலாம் என்பது குறித்து மக்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்கும்" என தெரிவித்துள்ளார்.

 

மாற்றப்பட்ட தனியுரிமை கொள்கையை ஏற்காவிட்டால், படிப்படியாக வாட்ஸ்அப் செயல்பாடுகள் குறைக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், தனியுரிமை கொள்கையை ஏற்காவிட்டாலும் வரும் வாரங்களில் வாட்ஸ்அப் செயலியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தமாட்டோம் எனவும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.