Skip to main content

கட்சியியில் துரோகிகளுக்கு இடமில்லை - மம்தா பானர்ஜி!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

mamata banerjee

 

மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முகுல் ராய். மத்திய ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர், கடந்த 2017ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பிறகு அவர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

 

இந்தநிலையில், இன்று (11.06.2021) அவர் தனது மகனோடு பாஜகவில் இருந்து விலகி மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா, முகுல் ராய் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவித்தார். 

 

அப்போது அவரிடம்,மேற்கு வங்க தேர்தலின் போது திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பலரும் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மம்தா, "கட்சியை விமர்சித்தவர்கள், பாஜகவிற்காகவும் பணத்திற்காகவும் கட்சிக்கு துரோகமிழைத்தவர்களை நாங்கள் கருத்தில் கொள்ளமாட்டோம்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா; கையும் களவுமாக சிக்கிய நபர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election flying squad caught the person who paid money to vote for the bjp

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இதனையொட்டி வாக்குப் பதிவுக்கான பணிகள் மாநிம் முழுவதும் அதிதீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தாமரை சின்னத்திற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை தேர்தல் படக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி  ஐஜேகே சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில்  வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை  நிலையான குழுவினர் அங்கு சென்றபோது அங்கு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா அழகரையை சேர்ந்த அஜித் என்பவரிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர்  பறக்கும் படையினர் அவரை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 60 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.