Women who sent sarees, bracelets, flowers to the Prime Minister

Advertisment

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அடிக்கடி உயர்ந்துவருகிறது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றன. புதுச்சேரியிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் ஆகியவை சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடிக்கு சேலை, வளையல், பூ, பொட்டு, மஞ்சள், கூந்தல் ஆகியவை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேம் பஞ்ச காந்தி தலைமையில் நிர்வாகிகள் ஆம்பூர் சாலையிலிருந்து சேலை, வளையல், பூ, பொட்டு, மஞ்சள், கூந்தல் ஆகியவற்றை ஊர்வலமாக கொண்டுவந்து ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் பிரதமருக்கு சேலை, வளையல், பூ, பொட்டு, மஞ்சள், கூந்தல் உள்ளிட்டவற்றை அனுப்பி அவருக்கு கண்டனம் தெரிவிப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.