The women who came out of the secret tunnel in the hostel kitchen...!

Advertisment

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பெண்களை தவறான தொழிலில் தள்ளி கும்பல் ஒன்று வருவாய் ஈட்டி வருவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பெங்களூரு மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர்பெங்களூருவில் உள்ள பல்வேறு தனியார் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, துர்கா என்ற விடுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விடுதியில் சமையல் அறைக்கு சென்ற காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சமையல் அறையில் சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர்அதில் உள்ளவர்களை வெளியே வருமாறு அழைத்தனர்.

சுரங்கத்தில் இருந்து கண்ணீருடன் வெளியே வந்த பெண்கள்தங்களின் சம்மதம் இல்லாமல் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக தெரிவித்தனர். குறிப்பிட்ட இடத்தில் மூன்று விடுதிகளில் பாலியல் தொழில் ஈடுபட்ட ஏழு பெண்கள் மீட்கப்பட்டனர்.

Advertisment

இது குறித்து பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.