Women who burned puppies alive in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சோபா மற்றும் ஆர்த்தி. ராணுவ வீரர்களின் மனைவியான இவர்கள், அந்த பகுதியில் அருகருகே வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய வீட்டருகே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது.

Advertisment

இந்த நிலையில், பிறந்து சில நாட்களான அந்த குட்டி நாய்கள், இரவு பகல் பாராமல் அடிக்கடி கூச்சலிட்டுள்ளது. இரவு நேரத்தில் நாய் குட்டிகள் கூச்சலிடுவதால், தங்களது தூக்கத்தை தொந்தரவு செய்து வருவதாக அந்த பெண்கள் எண்ணியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சோபா மற்றும் ஆர்த்தி ஆகியோர், அந்த நாய் குட்டிகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

அதன்படி, கடந்த 8ஆம் தேதியன்று தூங்கி கொண்டிருந்த அந்த 5 நாய் குட்டிகளின் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துள்ளனர். இதில், அந்த நாய்குட்டிகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சோபா மற்றும் ஆர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.