/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erumeli_vavar_masjid_-in.jpg)
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தரிசனம் செய்தார். இவர்கள் அனைவருமே 50 வயதுக்குட்பட்டவர்கள் என பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கேரளாவின் எருமேலி பகுதியில் உள்ள வாவர் மசூதிக்குள் பெண்கள் நுழையத் தடை உள்ளது. சபரிமலை போல இந்த தடையையும் நீக்க வேண்டும் என கூறி திருப்பூர் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பெண்கள் அந்த மசூதிக்குள் நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தீவிர கண்காணிப்பிற்கு பின் வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் 6 இளம்பெண்களைக் காவலர்கள் கைது செய்தனர். சபரிமலை போல மசூதியில் பெண்கள் நுழைவதற்கான தடையையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். விசாரணையின் பொது இவர்கள் இந்து மக்கள் கட்சியினர் என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பெண்களை கைது செய்த கேரள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)