Women Safety - Police arrive on shaky feet shortly after

உத்திரபிரதேசத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இஸ்லாமிய பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே கால்கள் உடைபட்டு நிலையில் அந்த நபர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் இஸ்லாமிய பெண் ஒருவர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பெண்ணின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அத்துமீறி முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தின் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. பெண் கொடுத்த புகார் மற்றும் சிசிடிவிகாட்சிஆதாரத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த சிறிது நேரத்திலேயேகால்கள் இரண்டும் உடைந்த நிலையில் நடக்க முடியாமல் நடுங்கி நடுங்கி போலீசார்உதவியுடன்கைத்தாங்கலாக நடந்து வந்த அந்த நபர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.