Advertisment

விவாகரத்தான கணவனுடன் மீண்டும் வீட்டை விட்டு ஓடிய மனைவி!

குஜராத் மாநிலத்தில் உள்ள கம்பீர் புரா கிராமத்தைச் சேர்ந்த சுகாபாய் தத்வியின் மகள் மீனாட்சி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அணில் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்கள் திருமணத்துக்கு இருவரின் வீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள், வீட்டைவிட்டு ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களில் அவர்களிடையே உரசல் ஏற்படவே, இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் விவாகரத்து செய்து கொண்டு மீண்டும் தங்களது வீட்டிற்கே திரும்பி விட்டனர்.

Advertisment

gvh

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் அணிலுடன், மீனாட்சி வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டார். இதனால் கோபமடைந்த மீனாட்சி வீட்டார் அணிலின் வீட்டிற்கு வந்து அவரின் குடும்பத்தைரா அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனாட்சி வீட்டை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அணில்-மீனாட்சி இருவரும் மீண்டும் ஓடிப்போன காரணம் தெரியவில்லை. தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் வைரலாகி வருகிறது.

divorce
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe