Advertisment

ஹர்திக் பாண்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - விசாரணையில் மும்பை போலீஸார்!

hardhik pandya

Advertisment

நிழல் உலக தாதாதாவூத் இப்ராஹின்கையாளாக கருதப்படுபவர்ரியாஸ் பதி.மிரட்டி பணம் பறித்தல், மோசடி செய்தல் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இவர் தேடப்பட்டு வருகிறார். இந்தநிலையில் இவரதுமனைவிரெஹ்னுமா பதி, மும்பை போலீஸாரிடம், ரியாஸ் பதி தன்னை அவரது தொழில் கூட்டாளிகளுடனும், பிரபலமான நபர்களோடும் ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தியாக புகார் அளித்துள்ளார்.

மேலும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் சிலரின் பெயரை அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, முன்னாள் இந்திய வீரர் முனாப் படேல், பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 24 ஆம் தேதி அளிக்கப்பட்ட இந்த புகார் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், மும்பை காவல்துறைவட்டாரங்கள், இந்த புகார் குறித்து விசாரித்து வருவதாகவும் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

DAWOOD hardhik pandya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe