Skip to main content

ஹர்திக் பாண்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - விசாரணையில் மும்பை போலீஸார்!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

hardhik pandya

 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹின் கையாளாக கருதப்படுபவர் ரியாஸ் பதி. மிரட்டி பணம் பறித்தல், மோசடி செய்தல் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இவர் தேடப்பட்டு வருகிறார். இந்தநிலையில் இவரது மனைவி ரெஹ்னுமா பதி, மும்பை போலீஸாரிடம், ரியாஸ் பதி தன்னை அவரது தொழில் கூட்டாளிகளுடனும், பிரபலமான நபர்களோடும் ஆசைக்கு இணங்குமாறு  கட்டாயப்படுத்தியாக புகார் அளித்துள்ளார்.

 

மேலும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் சிலரின் பெயரை அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, முன்னாள் இந்திய வீரர் முனாப் படேல், பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

 

செப்டம்பர் 24 ஆம் தேதி அளிக்கப்பட்ட இந்த புகார் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், மும்பை காவல்துறை வட்டாரங்கள், இந்த புகார் குறித்து விசாரித்து வருவதாகவும் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Departed Hardik Pandya who was on the field for wound

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

 

அந்த வகையில், மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நேற்று (19-10-23) இந்தியா - பங்களாதேஷ் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்த இன்னிங்சில் 9வது ஓவரில் பாண்ட்யா பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் தனது இரண்டாவது பந்தை வீசிய பின்பு மூன்றாவது பந்தை வீசினார். அப்போது, பங்களாதேஷ் அணியின் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், பந்தை நேர்பகுதியில் அடித்தார். அதில், அந்த பந்தை தடுக்க தயாரான பாண்ட்யா கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கணுக்கால் அடிபட்டது. வலியால் துடித்த் பாண்ட்யாவுக்கு மைதானத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது. இருப்பினும், வலி அதிகமாக இருந்த காரணத்தினால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 

 

அதை தொடர்ந்து, ஸ்கேன் எடுத்து காயத்தின் தன்மையை அறிய அருகில் உள்ள மருத்துவமனைக்கு பாண்ட்யா அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையே, எஞ்சிய மூன்று பந்துகளையும் விராட் கோலி வீசி முடித்தார். மேலும், பாண்ட்யாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்தார். இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ஹர்திக் பாண்ட்யா காயத்தில் சிக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிகளில், ஹர்திக் பாண்ட்யா இதுவரை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

சவால்விடும் தாவூத் இப்ராஹிம்... துப்புக் கொடுத்தால் 25 லட்சம்!

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

Challenging Dawood Ibrahim... 25 lakhs if you give a clue!

 

 

தாவூத் இப்ராஹிம் குறித்து தகவல் கொடுத்தால் 25 லட்சம் சன்மானம் என என்.ஐ.ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு சதிச்செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவன் தாவூத் இப்ராஹிம். தற்பொழுது வரை நிழல் உலக தாதா என்று கருதப்பட்டு தேடப்பட்டு வரும் நபராக உள்ள தாவூத் இப்ராஹிமை பிடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் யார் கையிலும் சிக்காமல் சவால் விடுத்து வருகிறான் தாவூத் இப்ராஹிம்.  அண்மைக்காலமாக தாவூத் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அரசின் விசாரணை அமைப்புகளால் தொடர்ந்து தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் குறித்து தகவல் கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும், தாவூத் இப்ராஹிம் மட்டுமல்லாது ஷகீல், சோட்டா ஷகீல் உள்ளிட்டோர் பற்றித் துப்பு கொடுத்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.