haryana

மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்ணை, ஒரு வருடத்திற்கும் மேலாக கணவனே கழிவறையில் சிறை வைத்த துயரச் சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

Advertisment

ஹரியானா மாநிலத்தில் பானிபட் மாவட்டத்திலுள்ள ரிஷ்பூர் என்ற கிராமத்தில் மூன்று குழந்தைகளுக்குத்தாயான ஒரு பெண்ணை, அவரது கணவர்ஓராண்டிற்கும் மேலாக சிறிய கழிவறையில் பூட்டி வைத்துள்ளார். இது பற்றி தகவலறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர்.

Advertisment

இது குறித்துபெண்கள் நலத்துறை அதிகாரி ரஜினி குப்தா கூறுகையில், "மீட்கப்பட்ட பெண் மிகவும் பலவீனமாக இருந்தார். அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. நாங்கள் அவரை மீட்டு உணவளிக்கும் போது 8 சப்பாத்திகள் உண்டார். அவருக்குப் போதிய அளவிலான உணவும், நீரும் கொடுக்காமல் அடைத்து வைத்துள்ளனர். அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது கணவர் கூறுகிறார். ஆனால், நாங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அந்தப் பெண் தெளிவாகப் பதிலளித்தார்" எனக் கூறினார்.

தற்போது இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.