Skip to main content

ஓடும் காரில் இருந்து குதித்து தப்பிய பெண்! - குற்றப் பின்னணியில் தமிழர்களா?

Published on 22/03/2018 | Edited on 22/03/2018

பாலியல் வன்முறையில் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ளார்.

 

molest

 

பெங்களூருவில் உள்ள கசவனஹல்லி பகுதியில் உள்ளது கான்பிடெண்ட் பீனிக்ஸ் குடியிருப்பு. இந்தப் பகுதியில் கடந்த ஞாயிறு இரவு மெடிக்கலுக்கு சென்றுவிட்டு வெளியே வந்த 28 வயது இளம்பெண்ணை, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். சிறிது தூரம் சென்ற அந்தக் கார், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் நிறுத்தப்பட்ட பின் உள்ளேயிருந்த நபர்கள் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதற்கு அந்தப் பெண் ஒத்துழைப்பு அளிக்காத நிலையில், மீண்டும் காரை எடுத்து கிளம்பியுள்ளனர். அப்போது அந்த நபர்களை எட்டி உதைத்த அந்தப் பெண், கார் கதவைத் திறந்து அதிலிருந்து குதித்து தப்பியுள்ளார். சிறு காயங்களுடன் தப்பித்த அந்தப் பெண், சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் கார் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், சிசிடிவி காட்சிகளில் வண்டி எண் தெளிவாக தெரியாததால், கர்நாடக காவல்துறையினர் தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. 

சார்ந்த செய்திகள்