rahul gandhi - amitshah

Advertisment

நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு சி.ஆர்.பி.எஃப்.பால் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பு z+ பாதுக்காப்புஆகும். இந்தz+ பாதுகாப்புதற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இந்தz+ பாதுகாப்பு பணியில் பெண்கமாண்டோக்களை நியமிக்க சி.ஆர்.பி.எஃப். முடிவு செய்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அமித் ஷா, மன்மோகன் சிங் ஆகியோரது இல்லங்களைப் பாதுகாக்கும் பணியிலும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியிலும்பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்படவுள்ளதாக சி.ஆர்.பி.எஃப். அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி அகியோருக்குவழங்கப்பட்டுவந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு நீக்கிவிட்டு,z+ பாதுகாப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.