Advertisment

‘எல்லாம் என் அப்பாக்காக..’ - தந்தை மறைந்தாலும் மகளின் துணிகர முடிவு

A woman's achievement to circumnavigate Tamilnadu in 14 days

Advertisment

பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மறைந்த தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 14 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்துள்ளார்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஜான்வி. இவர் பெங்களூருவில் கடந்த ஒன்றரை வருடமாக பெண்களுக்கு இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே ஜான்விக்கு இருசக்கர வாகனத்தின் மீதிருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை ராஜேந்திரன், மகளின் விருப்பத்தில் குறுக்கே நிற்காமல் அவருக்கு போதுமான பயிற்சிகளை அளித்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது தனது நோக்கம் என்றும் ராஜேந்திரன் தனது மகளிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த டிசம்பர் மாதம் ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜான்வி, தந்தையின் ஆசையை தான் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளார். இதன் பின் 14 நாட்களில் தமிழ்நாடு முழுவதையும் தன்னந்தனியாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். மேலும் பயணத்தின்போது தனது தந்தைக்கு பிடித்த முக்கிய கோவில்களுக்கும் சென்றதாகத்தெரிவித்துள்ளார்.

Tamilnadu Bangalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe