Advertisment

நடை பயிற்சி சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்

 woman who went for a walk in Bengaluru was incident

நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடக மாநிலம் பாலராயணப்பட்டியைச் சேர்ந்தவர் வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று தனது தங்கையின் மகனை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அக்கம்பத்தில் இருவரையும் தேடிப் பார்த்துள்ளனர்.

Advertisment

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் தேடும் பணியில் தீவிரமாகத்தேடினர். அப்போது சிறுவன் மட்டும் உடம்பில் காயங்களுடன்மீட்கப்பட்ட நிலையில் வித்யாவைத்தேடும் பணியை போலீசார் தொடர்ந்து தீவிரப்படுத்தினர். இந்த நிலையில்தான் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வித்யா சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் வித்யா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

woman Bengaluru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe