The woman who took apart the KTM RC raga bike in the middle of the road; A viral video

அண்மைக் காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆயுதங்களுடன் நடந்து வருவது, தாக்குவது, வீலிங் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டு மோதுவதை போல் வந்த இளைஞரை பிடித்த பெண் ஒருவர் நடு சாலையில் வைத்து இளைஞரின் பைக்கைஅடித்து பிரித்து எறியும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

Advertisment

எங்கு நடந்தது என உறுதியாக தெரியாத வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடு சாலையில் மோதும்படி வந்த கேடிஎம் ஆர்.சி ரக பைக்கால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் உறவினர்கள் உதவியுடன் பைக்கை சிறைபிடித்து அதன் பாகங்களை கையாலேயே பிய்த்து எறிந்தார். இதில் அந்த இளைஞருக்கும் அந்த பெண்ணிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.