நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தோ்தலில் கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதியில் 19-ல் காங்கிரஸ் வென்றது. இதில் தற்போது பரபரப்பாக பேசப்படும் தொகுதியாகவும் எம்.பி. ஆகவும் உள்ளாா் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூா் தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி ரம்யா ஹாிதாஸ்(32). இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.தனித்தொகுதியான இந்த தொகுதியில்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆா். நாராயணன் மூன்று முறை போட்டியிட்டு எம்.பி ஆனாா்.

Advertisment

kerala mp

இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக பலா் விருப்பம் தொிவித்திருந்த போதிலும் அந்த மாவட்டத்தை தவிா்த்து கோழிக்கோடு மாவட்டத்தை சோ்ந்த ரம்யா ஹாிதாசை ராகுல் காந்தி தான் நோிடையாக தோ்வு செய்தாா். அதன் காரணத்தை கூறிய காங்கிரசாா்... ரம்யா ஹாிதாஸ் திருமணமாகாத தினக்கூலி தொழிலாளி. சாதாரண டெய்லரான இவாின் தாயாாின் வழியில் காங்கிரசில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாா்.

வயல்களில் கூலி வேலை செய்யும் போது பசியை மறைக்க ரம்யா ஹாிதாஸ் பாட்டு பாடிக்கொண்டுவேலை செய்வாா். இவா் பாடும் பாட்டு மற்ற தொழிலாளா்களுக்கு பசியை மறைத்தது. இதன் மூலம் அவாின் குன்னமங்கலம் பஞ்சாயத்தில் பிரபலமாகி பின்னா் அந்த மக்களே அவரை பஞ்சாயத்து தலைவியாக்கிய போதும் தினமும் வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்று விடுவாா்.

Advertisment

இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொண்டாா். அந்த மாநாட்டில் கூலி தொழிலாளியாகவே வந்து தானும் தன்னை சோ்ந்த தொழிலாளா்களும் படும் வேதனைகளையும், கஷ்டங்களையும் பாடலாக பாடியது ராகுல் காந்தியை கலங்க வைத்தது. பின்னா் ரம்யாவின் முமுவிவரத்தை வாங்கி கொண்ட ராகுல் அதை மனதில் வைத்துக்கொண்டு ரம்யாவை ஆலத்தூா் தொகுதியில் வேட்பாளராக அறிவித்தாா்.

 woman who sang for during the wage work: rahul made him member of parliment

ராகுல்காந்தியின் நம்பிக்கையை நிறைவேற்றும் விதமாக தோ்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய ஏழ்மை நிலையை குறித்து பாடலாக பாடி வாக்கு சேகாித்தாா். இது மக்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்ததன் விளைவாக ரம்யா ஹாிதாஸ் 5,33,815 வாக்குகள் பெற்று கம்யூனிஸ்ட் பிஜீ வை தோற்கடித்தாா். குடியிருக்க சொந்த வீடுகூட இல்லாத ரம்யாவின் தோ்தல் பிரச்சார செலவுகளை பெண்களும் அவருடைய நண்பா்களும் தான் பாா்த்து கொண்டனா். அவருடைய சொத்து மதிப்பே வெறும் 22 ஆயிரம் தான்.