A woman who loo crores of money through marriage in uttarkhand

திருமணம் மூலம் பணக்காரர்களை குறிவைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சீமா. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜெய்பூரைச் சேர்ந்த தொழிலபதிர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சில தினங்கள் கழித்து, கணவர் வீட்டில் இருந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்ட சீமா, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தொழிலதிபரின் குடும்பத்தினர் சீமா மீது போலீசில் புகார் அளித்தனர்.

Advertisment

அந்த புகாரின் பேரில், தப்பிச் சென்ற சீமாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட சீமா, கணவரை விவாகரத்து செய்து மெயிண்டெனன்ஸ் பணமாக அவரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை வாங்கியுள்ளார். இதையடுத்து, 2017ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவரை, சீமா திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின், அவருடன் சில மாதங்கள் வாழ்ந்து விவாகரத்து வாங்கி கணவரிடம் இருந்து மெயிண்டெனன்ஸ் பணமாக ரூ.10 லட்சம் பெற்றுள்ளார். அதன் பின்னர், ஜெய்பூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அவரிடம் இருந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

நல்ல வசதி படைத்த, விவாகரத்து பெற்ற நபர்கள் மற்றும் மனைவியை இழந்த நபர்களை திருமண தளம் மூலம் கண்டுபிடித்து வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை சீமா திருமணம் செய்துகொண்டு வந்துள்ளார். இது வரை, பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் ரூ.1.25 கோடியை மெயிண்டெனன்ஸ் பணமாக பெற்றுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

Advertisment