/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbil-mahesh-art_1.jpg)
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பிவண்டி பகுதியில் வசித்து வரும் 26 வயது இளம் பெண் ஒருவர், 31 வயது இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால், இளைஞரோ திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, அந்த இளைஞர் இளம்பெண்ணை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. அப்போது, இளம்பெண் மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ள காதலனை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இளம் பெண் வீட்டு சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து காதலனின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த அவர் அலறி துடித்துள்ளார். பின்பு அவரே அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காதலன் இளம்பெண்ணின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து விட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை காதலி அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)