The woman who bought alcohol online! 4 lakh reported missing to police

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பவாய் காவல்துறையிடம் புகார் ஒன்று அளித்தார். அந்தப் புகாரில் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்துள்ளனர்.

Advertisment

அப்போது அவர், ‘சம்பவத்தன்று என் உறவினருடன் ஒயின் மதுபானம் குடிக்க விரும்பினேன். எனவே ஆன்லைனில் ஒரு மதுபான கடையின் போன் எண்ணை எடுத்து, அதை தொடர்பு கொண்டு பேசினேன். மேலும் மதுபானத்திற்கு ஆன்லைன் மூலம் ரூ.650 செலுத்தினேன். அதனைத் தொடர்ந்து மதுபான கடையில் இருந்து பேசுவதாக பிரதீப் குமார் என்ற நபர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அவர் மதுபானத்திற்கு ரூ.620 செலுத்துவதற்கு பதிலாக ரூ.650 அனுப்பிவிட்டதாக கூறினார். மேலும் கூடுதலாக செலுத்திய ரூ.30-ஐ திருப்பி தருவதாக கூறினார்.

Advertisment

இதற்காக அந்த நபர், எனக்கு ஒரு கியு.ஆர். கோடை அனுப்பினார். அந்த கியு.ஆர் கோடை ஸ்கேன் செய்த போது என் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரத்து 991 எடுக்கப்பட்டது. இதுகுறித்து, அந்த நபரிடம் கேட்டபோது கியு.ஆர். கோடில் தவறு நடந்துவிட்டதாக கூறினார். பின்னர் மீண்டும் ஒரு கியு.ஆர். கோடை அனுப்பினார். இவ்வாறு அந்த நபர் அனுப்பிய 6 கியு.ஆர். கோடுகளை நான் ஸ்கேன் செய்தார்.

அப்படி ஸ்கேன் செய்தததில் என் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் திருடப்பட்டது. மிகவும் தாமதமாகதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Advertisment