ஹரியானா மாநிலத்தில், ஒரு பெண் தனது அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் தனது தாய் இரக்கமின்றி அடிக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டே தன்னை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இருப்பினும், அந்த பெண் தனது தாயை கடித்தும், அடித்தும் திட்டவும் செய்கிறார்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து, பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.