woman was burnt incident rajasthan

பட்டியலினபெண் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயது மதிக்கத்தக்க பட்டியலினபெண். இவருக்குத்திருமணமாகி2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று அந்தப் பெண் தனியாக வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஷகுர் கான் என்ற இளைஞர் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண் மீது தீ வைத்துவிட்டு ஷகுர் கான் தப்பித்துச்சென்றுள்ளார்.

Advertisment

பின்னர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண் பல்மோராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஷகுர் கான் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. இதையடுத்து தலைமறைவான ஷகுர் கானை தீவிரமாகத்தேடி வந்த போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.