ADVERTISEMENT

வகுப்பறையில் மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியை வெளியான அதிர்ச்சி வீடியோ!

11:49 AM Nov 13, 2019 | Anonymous (not verified)

உத்திரபிரதேசம் மாநிலம், ரேபரேலியில் உள்ள காந்தி சேவா நிகேதனில், பெண் ஆசிரியையை, மாணவர்கள் சூழ்ந்து, நாற்காலியை கொண்டு தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி., மாநிலம் ரேபரேயில் உள்ள காந்தி சேவா நிகேதனில், பணியாற்றி வருகிறார் மம்தா துபே. இவர் காந்தி சேவா நிகேதன் குழுமத்தில் குழந்தைகள் நல அலுவலராக உள்ளார்.இந்நிலையில் வகுப்பறையில், மம்தா துபேயிடம் சில மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது ஒரு மாணவர் அவரது கைப்பையை தூக்கி வீசுகின்றனர். அதை அந்த ஆசிரியை மீண்டும் எடுத்து வந்து தனது இடத்தில அமருகிறார். மீண்டும் மாணவர்கள் ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு இருந்த நாற்காலியை எடுத்து ஆசிரியை அடிக்கின்றனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை மம்தா துபே கூறுகையில், இரு நாட்களுக்கு முன்பு கைகழுவும் அறையில் வைத்து, காந்தி சேவா நிகேதன் மாணவர்கள் சிலர் என்னை பூட்டிவிட்டனர். அப்போது மாணவர்கள் செய்வதை அங்கு இருக்கும் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு அந்த மேலாளர் மாணவர்கள், அப்படி தான் செய்வார்கள் என பொறுப்பில்லாமல் கூறினார்.இந்த நிலையில் அடுத்த இரு நாட்களில் மீண்டும் மாணவர்கள் என்னை தாக்கியுள்ளனர் என கூறினார்.ஆனால் இது குறித்து பேசிய மேலாளர், மாணவர்களை அடிக்கடி அனாதைகள் என ஆசிரியை கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர்கள் ஆசிரியை தாக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரின் புகார் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT