Woman suffering from chest pain and Doctor watched reels without treating her in uttar pradesh

மருத்துவர் ஒருவர் தனது செல்போனில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது 60 வயது பெண் மாரடைப்பால் இறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவேஷ் குமாரி (60). இவர் தனக்கு கடுமையான நெஞ்சி வலி இருப்பதாக தனது மகன் குருசரண் சிங்கிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குருசரண் சிங், தனது தாயை மைன்புரியில் உள்ள மகாராஜா தேஜ் சிங் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, பிரவேஷ் குமாரி மருத்துவமனையில் தீராத நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பணியில் இருந்த மருத்துவர் ஆதர்ஷ் செங்கார், நோயாளிக்கு சிகிச்சை அளிக்குமாறு செவிலியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்த தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க குருசரண் சிங் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், மருத்துவர் ஆதர்ஷ் தனது செல்போனில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

Woman suffering from chest pain and Doctor watched reels without treating her in uttar pradesh

பிரவேஷ் குமாரியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அங்குள்ளவர்கள் கூச்சலிட்டார்கள். எரிச்சலடைந்த மருத்துவர் ஆதர்ஷ், இறுதியாக எழுந்தார். அப்போது, குருசரண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ஆதர்ஷ், அவரின் கன்னத்தில் அறைந்தார். நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்த பிரவேஷ் குமாரி, ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குருசரண் சிங், போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.